
பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் திங்கட்கிழமை இரவு நேரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 6 வயது சிறுமி திடீரென காணாமல் போயுள்ளார். இதனை தொடர்ந்து காணாமல் போன சிறுமியை பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தேடி வந்த நிலையில் சிறுமியின் உடல் இறந்த நிலையில் ஆற்றின் அருகே கண்டெடுக்கப்பட்டது. அந்த சூழ்நிலையில் அழுது புலம்பிய சிறுமியின் பெற்றோர்களை பார்த்த மக்கள் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியது இந்த கொடூர சம்பவம்.
இது குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சந்தேகத்தின் பெயரில் இருவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்ததில் இந்தக் குற்ற செயலில் 2 பேர் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.
போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது, அதில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமியை 2 நபர்கள் கடத்தி சென்று, இருவரும் கூட்டாக இரக்கம் இன்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் பாலியல் வன்கொடுமை செய்த பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாதிக்கப்பட்ட சிறுமியை கொன்று உடலை ஆற்றின் அருகே வீசி சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை மட்டுமின்றி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.