கோவை மாவட்டத்தின் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் பகுதியில் உள்ள பூண்டி கிராமத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சித்ரா பௌர்ணமி அன்று தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று சித்ரா பௌர்ணமி என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு வந்திருந்தனர். அப்போது 15 வயது சிறுவனான விஷ்வா தனது தந்தையுடன் சாமி தரிசனம் செய்வதற்காக மலை ஏறினார்.

அதன் பின் அங்கிருந்து கீழே இறங்கிய போது திடீரென விஸ்வாவிற்கு மயக்கம் ஏற்பட்டதால் அங்கிருந்தவர்கள் உடனடியாக சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இதைத் தொடர்பு வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறுவனுக்கு ஏதாவது உடல் நல பாதிப்பு இருந்ததா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வெள்ளியங்கிரி கோவில் மலை ஏற உடல்நல குறைவு மற்றும் 60 வயது ஏற்பட்டவர்களுக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.