
கடலில் மிதக்கும் ஒரு பொருள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல உதவுவது கடல் நீரோட்டம் ஆகும். காற்று, கடல் நீரின் அடர்த்தி, பூமியின் சுழற்சி போன்றவற்றால் கடல் நீரோட்டம் உருவாகும். கடல் நீரோட்டத்தில் இருவகையான நீரோட்டம் உள்ளது. அதில் ஒன்று கடல் மேற்பரப்பு நீரோட்டம். மற்றொன்று ஆழமான நீரோட்டம். கடல் மட்டத்தின் நிலவியல் அமைப்பு, கடற்கரை அமைப்பு ஆகியவை நீரோட்டம் வேகமாகவோ அல்லது மெதுவாகவோ அல்லது வேறு திசையில் பயணிக்கவும் காரணமாக அமைகிறது.
மேற்பரப்பு கடல் நீரோட்டம் 10 சதவீதம் நீர் நகர்வதற்கு காரணமாக உள்ளது. மீதமுள்ள 90% கடல் நீர் நகர்வதற்கு ஆழமான கடல் நீரோட்டம் காரணமாக உள்ளது. மேற்பரப்பு கடல் நீரோட்டமும் ஆழமான கடல் நீரோட்டமும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டது. கடற்கரை பகுதிகளில் நிலத்தை நோக்கி நீர் வருவதற்கும் கடலில் செல்வதற்கும் காரணமாய் இருப்பது காற்று. காற்றின் திசைக்கு ஏற்ப மேற்பரப்பு கடல் நீரோட்டம் செல்ல செல்ல ஆழமான கடல் நீரோட்டமும் திசையிலேயே பயணிக்கும் காற்றின் தாக்கம் கடல் பரப்பில் 400 மீட்டர் ஆழம் வரையிலும் இருக்கும்.
பூமியின் மத்திய ரேகை பகுதியில் இருந்து காற்று இரு துருவங்களுக்கும் பயணிக்கும். மத்திய ரேகை பகுதிகள் வெப்பம் மிகுந்த பகுதியாக இருப்பதால் வெப்பம் மிகுந்த கடல் நீரோட்டமாக இருக்கும். இதுவே துருவப் பகுதிகளில் குளிர்ந்த கடல் நீரோட்டமாக இருக்கும். கடல் நீரோட்டம் உலகம் முழுவதும் பயணிக்கும். இது ஒரு கன்வேயர் பெல்ட் போல செயல்படுகிறது. முதல் நிலப்பரப்பில் 150 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தெரிந்த போது அட்லாண்டிக் பெருங்கடல் உருவானது.
இது உலகின் 2 வது பெரிய கடலாகவும் 29 சதவீத கடலின் பரப்பரவை கொண்டது. அட்லாண்டிக் பெருங்கடல். அட்லாண்டிக் பெருங்கடலின் கடல் நீரோட்டம் உயிர்ச்சூழலுக்கு முக்கிய நீரோட்டமாக இருந்து வருகின்றது. இந்த அட்லாண்டிக் பெருங்கடலின் கடல் நீரோட்டம் இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் இருந்து வலுவிழந்து வருவதாக சொல்லப்படுகிறது. கார்பன் உமிழ்வு அதிகரிப்பால் புவி வெப்பமயமாதலை நாம் அறிவோம்.
அதனால் பூமியில் உள்ள பனிப்பாறைகள் அனைத்தும் உருக தொடங்கியுள்ளது. கிரீன்லாண்டில் உள்ள பனிப்பாறைகள் உருகி அட்லாண்டிக் கடலில் நன்னீர் கலக்கிறது. அதிக அளவு நன்னீர் கலப்பதால் பனிக்கட்டியாகும் நீரில் உப்பு தன்மை கடலில் குறைந்து அட்லாண்டி கடல் நீரோட்டத்தின் சுழற்சி வலுவிழக்கிறது. இந்த கடல் நீரோட்டம் வலுவிழந்தால் உலகத்தின் பல்வேறு இடங்களில் பருவ காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இந்தியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா பகுதிகளில் உணவு உற்பத்தியில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.