தாவரத்திலிருந்து வெளியாகும் சக்தி வாய்ந்த நுண்ணுயிர் எதிர்ப்பியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். உலகம் முழுவதும் உள்ள மக்கள் நாள்தோறும் புதுவித நோய் கிருமிகளால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அத்தகைய கிருமிகளில் இருந்து சிறந்த முறையில் மக்களை பாதுகாக்க புதிய நுண்ணுயிர் எதிர்ப்பியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தாவரத்தில் இருந்து வெளியாகும் நச்சிலிருந்து இந்த புதிய நுண்ணுயிர் எதிர்ப்பி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ், ஜெர்மன் மற்றும் போலந்து ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த நுண்ணுயிர் எதிர்ப்பி ஆனது இதற்கு முன்பாக பயன்படுத்தபட்டு வரும் நுண்ணுயிர் எதிர்ப்புகளை காட்டியும் அதிக திறன் கொண்டது என்றும் இதில் பக்க விளைவுகள் எதுவும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளனர். ஆராய்ச்சியாளர்களின் இந்த கண்டுபிடிப்பு மருத்துவத் துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.