உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ளது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் ரஷ்யாவின் நட்பு நாடான சீனா போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதாவது போரை நிறுத்தவும் அமைதி பேச்சு வார்த்தையை தொடங்கவும் சீனா இரு நாடுகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு ஆதரவாக சீனா செயல்பட்டு வருவதாக மேற்கத்திய நாடுகள் குறை சொல்லி கொண்டிருக்கும் வேளையில் இந்த போர் நிறுத்த அழைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இது குறித்து கூறியதாவது “சீனாவின் இந்த அமைதிப் பேச்சுவார்த்தை திட்டம் குறித்து விவாதிக்க நான் அந்நாட்டின் அதிபர் ஜின்பிங்கை சந்திக்க இருக்கிறேன். இந்தத் திட்டத்தின் சீனா அமைதிக்கான தேடலில் ஈடுபட்டுள்ளது என்பது தெரிகின்றது. சீனாவினுடைய அமைதி பேச்சுவார்த்தை மற்றும் தேசிய இறையாண்மைக்கும நான் மதிப்பளிக்கிறேன். மேலும் ரஷ்யாவிற்கு சீனா ஆயுதங்களை வழங்காது என்பதை நான் இப்போது நம்புகிறேன். இதனால் நான் சீன அதிபர் ஜின் பிங்கை சந்திக்க இருக்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.