பாகிஸ்தானில் குடும்ப வறுமைக்காக வேலைக்கு சென்ற 15 வயது சிறுமியை கடத்தி 60 வயது நபர் இரண்டாவது மனைவியாக்க கட்டாய திருமணம் செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் உள்ள முதல்வராக நைலா என்ற பெண் இருந்துள்ளார். அவருக்கு வீட்டு வேலைக்கு ஆள் தேவைப்பட்டுள்ளது. அந்த பகுதியை சேர்ந்த 15 வயது மகளை தாயிடம் வேலைக்கு கேட்டு இருக்கிறார்.

பண தேவையாக இருந்த சூழலில் வேலைக்கு அனுப்ப சிறுமியின் தாயாரும் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் நைலாவின் 60 வயது கணவரான ராணா சிறுமியை கடத்தி இரண்டாவது மனைவியாக்குவது என முடிவு செய்து, அதற்கான வேலையில் இறங்கியுள்ளார். அதன்படி சிறுமியை கடந்தி அவர் கட்டாய திருமணம் செய்துள்ளார். வேலைக்கு சென்ற மகள் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இரண்டு மாதங்கள் கழித்து சிறுமி கடத்தப்பட்டு திருமணம் செய்த அதிர்ச்சி சம்பவம் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. இருப்பினும் இந்த சம்பவத்தில் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. அந்தப் பகுதியில் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.