சீன நாட்டில் ஷியான் நகரத்தில் தொல்பொருள் ஆராய்ச்சி நடந்து வருகின்றது. இந்த தளத்தில் உள்ள ஒரு அரண்மனையின் இடிபாடுகளில் இருந்து ஆடம்பர கழிப்பறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கிமு 221 முதல் கிமு 206 வரை கின் வம்சத்தின் போது பயன்படுத்தி இருக்கலாம் என கூறப்படுகின்றது. இதுகுறித்து சீன சமூக அறிவியல் தொல்லியல் கழகத்தின் ஆய்வாளர் லியு ருய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்

அதில் கூறி இருப்பதாவது பிற்கால ஹான் வம்சத்தின் போது இந்த கழிப்பறைகளை உயர் அதிகாரிகளுக்காக ஒதுக்கப்பட்டிருக்கலாம். மேலும் இந்த கழிப்பறையை கின் சியாகோன் அல்லது அவருடைய தந்தை பயன்படுத்தி இருக்கலாம். குறிப்பாக பழங்கால சீனர்கள் துப்புரவு பணிகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பதற்கு இந்த “பிளாஷ் டாய்லெட்” ஒரு சான்றாக அமைந்துள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.