ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டின் கடந்த செவ்வாய்க்கிழமை இந்தியா உட்பட 19 நாடுகளுக்கு விசா வழங்கும் நடைமுறையை எளிதாக்கும் ஆணையில் கையெழுத்திட்டுள்ளார். இது குறித்து அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி தெரிவித்ததாவது “கடந்த வாரம் 11 நட்பு நாடுகளின் குடிமக்களுக்கு விசா இல்லாத பயணத்தையும், ஆறு நட்பு நாடுகளின் குடிமக்களுக்கான நுழைவு கட்டுப்பாட்டை எளிதாகவும் ரஷ்யா திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய விசா நடைமுறையில் கம்போடியா, சீனா, இந்தோனேசியா, இந்தியா, பக்ரைன், மலேசியா, மெக்சிகோ, மியான்மர், தாய்லாந்து, சவுதி அரேபியா, பிலிப்பைன்ஸ், துருக்கி, கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஆகிய நாடுகள் அடங்கும். அதோடு கொரோனாவுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட இ-விசா திட்டத்தை மீண்டும் தொடங்க உள்ளோம். இதனை அடுத்து குறிப்பிட்ட நாடுகளினுடைய குடிமக்கள் தங்கும் விடுதியில் முன்பதிவு செய்திருந்தால் அவர்களுக்கு ஆறு மாதங்கள் வரை சுற்றுலா விசா பெற வழிவகை செய்துள்ளோம்” என்று அவர் கூறியுள்ளார்.