இந்தோனேஷியாவுக்கும் சீனாவிற்கும் தென் சீன கடல் பகுதி தொடர்பாக மோதல் நிலவி வருகிறது. ஆனால் அதே சமயத்தில் இந்தோனேஷியாவும் இந்தியாவும் தங்களின் வியூக மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை பரந்த அளவிலான பகுதிகளில் விரிவுபடுத்திக் கொண்டே செல்கின்றன.

இந்த நிலையில் ஆசியாவில் உள்ள நாடுகளுக்கான ஒட்டுமொத்த ராஜதந்திர நடவடிக்கையின் ஒரு பகுதியாக உள்ள இந்தியாவின் ஐ எம் எஸ் சிந்து கேசரி நீர்மூழ்கி கப்பல் தற்போது இந்தோனேசியாவில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நீர்மூழ்கி கப்பலானது கடந்த 23ஆம் தேதி சுந்தா ஜலசந்தி வழியாக ஜகார்த்தாவை சென்று சேர்ந்தது.