உணவு விநியோக தொழில்நுட்ப நிறுவனமான zomato அதன் காலாண்டு நிதி வருவாய் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி நிறுவனத்தின் இழப்புகள் மேலும் அதிகரித்திருப்பதாகவும் இந்த நகரங்களின் செயல்திறன் மிகவும் ஊக்கமளிக்கவில்லை என்ற காரணத்தினால் 225 சிறிய நகரங்களில் தன்னுடைய செயல்பாடுகளை நிறுத்தியுள்ளதாகவும் டிசம்பர் மாதம் முடிவடைந்த காலாண்டில் உணவு விநியோக வணிகம் குறைந்ததால் நிறுவனம் ரூ.346.6 கோடி நஷ்டம் அடைந்திருப்பதாக கூறியுள்ளது. மேலும் தற்போதைய மந்த நிலை எதிர்பாராதது. இது உணவு விநியோக லாபத்தின் வளர்ச்சியை வெகுவாக பாதித்துள்ளது.
இருப்பினும் எங்களது லாப நோக்கத்தை அடைய நாங்கள் நல்ல நிலையில் இருப்பதாகவே நினைக்கின்றோம் என கூறியுள்ளது. 225 சிறிய நகரங்களில் இருந்து வெளியேறும் நிறுவனத்தின் முடிவு சுமார் 800 பணியிடங்களுக்கு ஆட்கள் வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ள நேரத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. ஜனவரி மாதம் 225 சிறிய நகரங்களில் இருந்து சொமட்ட உணவு விநியோக சேவையில் வெளியேறியுள்ளது. இது டிசம்பர் காலாண்டில் அதன் மொத்த ஆர்டர் மதிப்பில் 0.3 சதவீத பங்களிப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் எந்த நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரியவில்லை.
இந்நிலையில் சொமேட்டா நிறுவனம் தனது லாபத்தை அதிகரிப்பதற்காக நாங்கள் ஜனவரி பிற்பகுதியில் சொமேட்டா தங்கம் எனும் ஒரு புத்தம் புதிய உறுப்பினர் திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். இதில் ஒன்பது லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் இணைந்திருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் நிறுவனத்தின் செலவுகளை குறைப்பதற்காக மக்களை பணி நீக்கம் செய்யும் சமயத்தில் சொமேட்டா தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல் சொமேட்டா சுமார் 800 பணியாளர்களை பணியமர்த்த இருப்பதாக லிங்டினில் அறிவித்து பணியாளர்களுக்கு ஒரு நம்பிக்கையை அளித்துள்ளார். இது பணியாளர்களிடமிருந்து ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. பின்னர் பொது அதிகாரி, தயாரிப்பு உரிமையாளர், வளர்ச்சி மேலாளர், மென்பொருள் மேம்பாட்டு பொறியாளர் உட்பட ஐந்து பதவிகளுக்கான விளம்பரங்களை லிங்டினில் வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
