ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக உள்பட சில சிறிய கட்சிகளும், சாதி கட்சிகளும் மற்றும் சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் என்பதால் பலர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் ஈரோடு இடைத்தேர்தலில் 80 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு, 41 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஓபிஎஸ் ஆதரவு பெற்ற வேட்பாளர் செந்தில் முருகனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. முன்மொழிபவர் இடத்தில் யாருமே கையெழுத்திடாததால் நிராகரிக்கப்பட்டதாக அதிகாரி தெரிவித்துள்ளார். அவரே வேட்புமனுவை  வாபஸ் பெறுவதாக இருந்தாலும், மனுவை சரியாக பூர்த்தி செய்யாமலேயே தாக்கல் செய்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.