
லித்துவேனியாவில் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்த ராட்சத டிரான்ஸ்பார்மர் கப்பல் மூலம் உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மின்சார கட்டமைப்பை குறி வைத்து ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் மைனஸ் டிகிரி குளிரில் ஹீட்டர்களை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.
உக்ரைன் உள்ளிட்ட சோவியத் நாடுகளில் ஒரே மாதிரியான உட்கட்டமைப்பு உள்ளதால் லித்துவேனியாவில் 1980-ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட பயன்பாட்டில் இருந்த 200 டன் ட்ரான்ஸ்பார்மர் சிறிது சிறிது பாகமாக பிரிக்கப்பட்டு உக்ரைனுக்கு அனுப்பப்படுகிறது. 18 கோடி மதிப்பிலான இந்த டிரான்ஸ்பார்மர் மூலம் ஒரு மிகப்பெரிய நகருக்கு மின் விநியோகம் செய்யப்படும் என கூறப்படுகின்றது.