பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் நவால் கிஷோர் பாண்டே (65) என்ற ஆசிரியர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் நிலையில் கடந்த சனிக்கிழமை சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது திடீரென சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்ததால் ஆசிரியர் நவாஸ் கீழே விழுந்துவிட்டார். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து முடங்கியது. இந்த போக்குவரத்து முடக்கத்தால் ஆத்திரமடைந்த பெண் காவலர்கள் வயதான ஆசிரியர் என்று கூட பாராமல் அவரை நடுரோட்டில் லத்தியை வைத்து கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் பலரும் பெண் காவலர்களுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர். அதோடு சம்பந்தப்பட்ட பெண் காவலர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது உரிய முறையில் விசாரணை நடத்தி நோட்டீஸ் அனுப்பப்படும் என்று கைமூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லலித் சர்மா தெரிவித்துள்ளார். மேலும் வயதான ஆசிரியரை பெண் காவலர்கள் தாக்க அவர் வழி தாங்க முடியாமல் கதறும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.