இந்திய பாஸ்போர்ட்டை கொண்ட என்ஆர்ஐ ஒருவர் எந்த ஆதார் மையத்தில் இருந்தும் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது தெரிவித்துள்ளது. ஒரு NRI ஆதார் கார்டை பெற செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து நாம் தெரிந்துகொள்வோம்.

# உங்களது அருகே உள்ள ஆதார் மையத்திற்கு செல்லவும்.

# செல்லுபடியாகும் இந்திய பாஸ்போர்ட்டை எடுத்துச் செல்லவும்.

# பதிவு படிவத்தில் உங்களது விபரங்களை நிரப்பவும்.

# NRI-கள் அவர்கள் மின் அஞ்சல் ஐடியைக் குறிப்பிடவும்.

# NRI சேர்க்கைக்கான அறிவிப்பு சற்று வித்தியாசமானது ஆகும்.

# உங்களை NRI-ஆக பதிவுசெய்ய ஆபரேட்டரிடம் கோரவும்.

# அடையாளச் சான்றுக்கு ஆபரேட்டரிடம் உங்களது பாஸ்போர்ட்டைக் கொடுக்கவும்.

# அடையாளச் சான்றுக்குப் பின், பயோமெட்ரிக் செயல்முறையை முடிக்கவும்.

# ஆபரேட்டரிடம் சமர்ப்பிக்கும் முன்னதாக திரையிலுள்ள அனைத்து விபரங்களையும் சரிபார்க்கவும்.

# அடுத்து 14 இலக்க பதிவு ஐடி,தேதி, என்ரோல் மெண்ட் ரசீது(அ) பதிவுச்சீட்டு சேமிக்க வேண்டும்.

அதன்பின் உங்கள் செயல்முறை வெற்றிகரமாக முடிக்கப்பட்டு விட்டதா என்பதனை myaadhaar.uidai.gov.in/CheckAadhaarStatus எனும் முகவரியில் சரிபார்க்கலாம். உங்களது முகவரி மற்றும் பிறந்த தேதியை சரிபார்ப்பதற்காக பாஸ்போர்ட்டுடன் கூடுதலாக மற்றொரு முறையான ஆவணம் (அ) ஆவணங்களை வழங்க உங்களுக்கு ஆப்ஷன் இருக்கிறது.