சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் நெ. மேரி வில்சன் மற்றும் வணிக வரிகள் மற்றும் பதிவுத்துறை அமைச்சர் த. லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோர் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 57-வது கூட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று (03.09.2026) கோலாகலமாக நடைபெற்றது.
நாட்டின் பொருளாதாரப் போக்கைத் தீர்மானிக்கும் மிக முக்கியக் கூட்டமாகக் கருதப்படும் இந்த ஜிஎஸ்டி ஆலோசனைக் கூட்டத்தில், வரவிருக்கும் தேசிய அளவிலான கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் முன்வைக்கப்பட வேண்டிய முக்கியக் கோரிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
வரிகள் குறைப்பு, மாநிலத்திற்குரிய நிதிப் பங்கீட்டை முழுமையாகப் பெறுவது மற்றும் வணிகத் துறையினர் எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வு காண்பது தொடர்பாகவும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துறை சார்ந்த உயர் அதிகாரிகளுடன் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தொழில் வளர்ச்சியைப் பாதுகாக்கும் வகையிலும், நடுத்தர வர்க்க மற்றும் ஏழை எளிய மக்களின் மீது கூடுதல் வரிச்சுமை ஏறிடாதவாறு மாநிலத்தின் நலன்களை வலுவாக எடுத்துரைப்பது குறித்து அமைச்சர்கள் இருவரும் முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளனர்.
மத்திய அரசின் வரவிருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழகத்தின் குரல் ஓங்கி ஒலிக்கச் செய்வதற்கான அனைத்து முன் தயாரிப்புப் பணிகளும் இந்த ஆலோசனைக் கூட்டத்தின் மூலம் வெற்றிகரமாக இறுதி செய்யப்பட்டுள்ளன.
இன்று (03.09.2026) தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. நெ. மரிய வில்சன், மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு. த. லோகேஷ் தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலையில் 57- வது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்ற கூட்டத்திற்கு… pic.twitter.com/2ZQmWCtGhu
— Logesh TamilSelvan D (@logintvk) September 3, 2026
“>
வர்த்தகத் துறை வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தக் கூட்டத்தின் முடிவுகள், மாநிலத்தின் நிதி மேலாண்மையில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
