திருமணத்திற்குப் புறம்பான உறவுகளால் கணவன்-மனைவி இடையே ஏற்படும் நம்பிக்கையிழப்பு, கொடூரக் குற்றங்களில் முடிவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் உத்தரப் பிரதேச மாநிலம் ஒரு பகுதியில், மனைவி ஒருவரே தன் கணவரைக் கொடூரமாகக் கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ண குமார் என்பவருக்கும் பிரீத்தி என்பவருக்கும் 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்தது. பிரீத்தி வேறொரு ஆணுடன் தொடர்பில் இருந்ததால் தம்பதியரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவம் நடந்த அன்று, கணவனுக்கு மது குடிக்கப் பணம் கொடுத்து அனுப்பிய பிரீத்தி, அவர் வீடு திரும்பியதும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதன்பின், பிரீத்தி தனது கணவரின் கழுத்தைத் துண்டால் இறுக்கிக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். அப்போது அந்த வீட்டில் நாய் ஒன்று இடைவிடாமல் குரைத்துக் கொண்டிருந்த நிலையில், இச்சம்பவத்தின் வீடியோ காட்சிகளும் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி மனதை உலுக்குவதாக அமைந்துள்ளது.
கணவரின் கழுத்தில் இருந்த காயங்களைப் பார்த்துச் சந்தேகமடைந்த உறவினர்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். பிரேதப் பரிசோதனையில் அது கொலை என்பது உறுதியானது. கணவனின் ரூ.35 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் எருமைகளை விற்றுவிட்டுத் தன் காதலனுடன் தப்பியோட பிரீத்தி திட்டமிட்டிருந்ததாகக் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
यूपी: ये प्रीति है, इन्होंने तौलिया से गला दबाकर अपने पति की हत्या कर दी। आरोप है पति शराब का आदी था, इसलिए अक्सर घर में क्लेश रहती थी। आरोपी महिला का दूसरे मर्द से चक्कर भी बताया गया है। मामला बुलंदशहर कोतवाली क्षेत्र का है। pic.twitter.com/M7axD1falr — Shahnawaz(News24) (@Shahnawazreport) August 27, 2026 “>
இச்சம்பவம் தொடர்பாகப் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்ட மனைவி பிரீத்தியைக் கைது செய்துள்ளனர். மேலும், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துண்டையும் அவரிடமிருந்து பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
