தமிழகத்தில் வரும் மே 14-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த முன்வர வேண்டும் எனத் தாம் ஏற்கெனவே வலியுறுத்திய நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியும் இதே போன்றதொரு கோரிக்கையை முன்வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதைய தவெக அரசுடன் திமுகவைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் இணைந்து செயலாற்ற மாட்டார்கள் என்பதால், நிர்வாகத்தில் தேக்க நிலை ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், இந்த ஆண்டு வழக்கத்தை விடக் கூடுதலாகப் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மழையால் ஏற்படும் பாதிப்புகளின் பழியை முழுமையாகத் தவெக அரசின் மீது சுமத்த திமுக திட்டமிட வாய்ப்புள்ளது.

குறிப்பாகச் சென்னையின் தற்போதைய கட்டமைப்பு நிலவரம் மிகவும் மோசமாக உள்ளதால், எதிர்க்கட்சிகளின் இந்த அரசியல் சதிக்கு அரசு எந்த வகையிலும் இடம் கொடுக்கக் கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்தச் சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தற்போதைய உள்ளாட்சி அமைப்புகளை உடனடியாகக் கலைத்துவிட்டு, அரசாங்கமே நேரடியாக அந்தப் பணிகளைத் தன் கையில் எடுத்துச் சில காலம் நிர்வாகத்தை நடத்துவதே மிகச் சிறந்த தீர்வாக இருக்கும் என்று வலுவான கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

“>

 

இந்த விவகாரம் தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.