திரைத்துறைக் காலத்தில் இருந்தே நடிகர் விஜய்யின் நீண்டகால மேலாளராகவும், தவெக கட்சித் தொடங்கியதும் இணைப் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டவர் ஜெகதீஷ் பழனிசாமி. தேர்தல் எதிலும் போட்டியிடாமல் தனது ‘ரூட்’ நிறுவனம் மூலம் திரைக்குப் பின்னால் இருந்து சமூக வலைதளப் பணிகளை கவனித்து வந்த அவர், தற்போது தவெக அரசு அமைந்ததும் முதல்வர் விஜய்யின் தனிச்செயலாளராகவும் பொறுப்பேற்றுள்ளார்.
வழக்கமாக இதுபோன்ற அரசுப் பதவிகளில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்படும் மரபு மீறப்பட்டு, சினிமா மற்றும் கட்சியைச் சேர்ந்த ஒருவர் இந்த முக்கியப் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளது எதிர்க்கட்சிகளிடையே கேள்விகளை எழுப்பினாலும், அவர் தனது சொந்த அரசியல் அடையாளத்தை உருவாக்க முயன்று வருவதாகக் கூறுகிறது.
இதன் காரணமாக, முதல்வர் விஜய்யைச் சந்திக்க விரும்பும் அமைச்சர்கள் அனைவரும் இப்போது தனிச்செயலாளர் ஜெகதீஷ் பழனிசாமியைத்தான் அணுக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சந்திப்புக்கான காரணத்தை அவரிடம் விரிவாகக் கூறினால் மட்டுமே அவர் அதனைப் பரிசீலித்து முதல்வருக்கான அப்பாயிண்ட்மென்ட்டைத் தருவதாகவும், இல்லையென்றால் அந்த மனுக்கள் நேராக வெயிட்டிங் லிஸ்ட்டுக்குச் சென்றுவிடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் விளைவாக, ஜூனியர் அமைச்சர்கள் பலரால் தங்களுக்குத் தேவையான போது முதல்வரை நேரில் சந்திக்க முடியாமல் தவித்து வருவதாகவும், தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண நினைத்த சில அமைச்சர்கள், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை அணுகி முதல்வரைச் சந்திக்க ஏற்பாடு செய்யும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.
முதல்வர் விஜய்யிடம் நெருங்க விடாமல் தடுக்கும் சக்தி: சந்திக்க முடியாததால் அமைச்சர்கள் பரிதவிப்பு:
முதல்வர் விஜய்யின் நீண்டகால மேனேஜரும், சினிமா உலகை சேர்ந்தவருமான ஜெகதீஷ் பழனிசாமி, விஜய் அரசியலுக்கு வந்த பிறகு தவெகவின் இணைப் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.
தேர்தல்களில்… pic.twitter.com/zhgTOXDfjX— தங்க.காளிப்பாண்டி (@sureshkalipandi) August 30, 2026
“>
அதற்கு அவரோ, “நானும் உங்களைப் போன்ற இக்கட்டான நிலையில் தான் இருக்கிறேன்; இருந்தாலும் தலைவர் தளபதியிடம் தகவலைச் சொல்லிவிட்டுத் தெரிவிக்கிறேன், அவர் நினைத்தால் உங்களுக்கு அழைப்பு வரும், அதுவரை காத்திருங்கள்” என்று கைவிரித்துவிட்டதாகத் தெரிகிறது. இதனால், முதல்வரை எளிதில் சந்திக்க முடியாமல் அமைச்சர்கள் அனைவரும் கடுமையான மன உளைச்சலுக்கும் கலக்கத்திற்கும் ஆளாகியுள்ளனர்.
