அசாம் மாநிலம் நாகாவ் மருத்துவக் கல்லூரியில் சமூக மருத்துவத் துறை இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வந்த டாக்டர் சாஹின் ரஹ்மான், ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கிச் சரிந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வழக்கம்போல் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து கொண்டிருந்த டாக்டர் ரஹ்மான், திடீரென நிலைதடுமாறி மெதுவாகக் கீழே அமர்ந்து பின்னர் தரைக்குச் சரிந்து விழுந்துள்ளார்.
एक जिम में वर्कआउट करते हुए 47 साल के एक डॉक्टर अचानक बेहोश होकर गिर पड़े… और कुछ ही देर बाद उनकी मौत हो गई। यह घटना एक बार फिर सवाल खड़ा कर रही है—क्या फिट दिखना हमेशा स्वस्थ होने की गारंटी है?
असम के नगांव में 27 अगस्त की शाम करीब 7:36 बजे नगांव मेडिकल कॉलेज एंड हॉस्पिटल के…
— Pooja Bishnoi (@poojabishnoi36) August 29, 2026
உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த இதுபோன்ற சம்பவங்கள் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
