உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டம், தெல்ஹூபூர் காவல் எல்லைக்குட்பட்ட நௌபஸ்தா பகுதியில் இயங்கி வரும் ‘பார்வதி குளோபல் சயின்ஸ்’ என்ற தனியார் பள்ளியில், வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை பாலக் என்பவரை மாணவனின் தாய் மற்றும் தந்தை சேர்ந்து கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பள்ளியில் படிக்கும் குறிப்பிட்ட ஒரு சிறுவன் சில நாட்களுக்கு முன்பு முயல் ஒன்றை அடித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்ட ஆசிரியை பாலக், அந்தச் சிறுவனைக் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவனின் தாய் சௌமியா மிஸ்ரா மற்றும் தந்தை அபிஷேக் ஆகியோர், வியாழக்கிழமை காலை 10:30 மணியளவில் பள்ளிக்குள் நேரடியாக நுழைந்து, சிறு குழந்தைகள் கண்ணெதிரேயே ஆசிரியை பாலக்கை பெஞ்சில் இருந்து கீழே தள்ளி மிதித்து மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
प्रतापगढ़ में महिला ने स्कूल में घुसकर शिक्षिका को पीटा, सीसीटीवी फुटेज में दिखी धमाकेदार एंट्री…कक्षा में बच्चों के सामने शिक्षिका की पिटाई का वीडियो वायरल, पिता की तहरीर पर पुलिस ने दर्ज किया मुकदमा।
प्रतापगढ़ जिले के देल्हूपुर थाना क्षेत्र के नौबस्ता स्थित पार्वती ग्लोबल… pic.twitter.com/EGkIvTmEBG
— Chandan Pandey (@Chandanup65) August 29, 2026
இந்த கொடூரத் தாக்குதலால் வகுப்பறையில் இருந்த சிறு குழந்தைகள் பயத்தில் அலறித் துடித்தனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பாதிக்கப்பட்ட ஆசிரியையின் தந்தை சஞ்சய் குமார் மிஸ்ரா அளித்த புகாரின் பேரில், தாக்குதல் நடத்திய சௌமியா மிஸ்ரா மற்றும் அவரது கணவர் அபிஷேக் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீசார் உறுதியளித்துள்ளனர்.
