சகோதரத்துவத்தின் உன்னதமான அன்பையும், பாசத்தின் ஆழத்தையும் உணர்த்தும் ரக்ஷா பந்தன் பண்டிகையின் உண்மையான அர்த்தத்தை மெய்ப்பிக்கும் வகையில், ஒரு சிறுவனின் நெகிழ்ச்சியான செயல் இணையவாசிகளின் இதயங்களை உருக்கியுள்ளது.

மழையில் நனைந்து விடக்கூடாது என்பதற்காகத் தனது அக்காவுக்குத் தனக்கு தெரிந்த வகையில் பாதுகாப்பளித்து, வழியில் குறுக்கிட்ட நாயையும் துரத்திவிட்ட அந்தச் சிறுவனின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி, பெரும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.

மழை பெய்து கொண்டிருக்கும் சூழலில், தன் சிறிய கைகளால் குடையைப் பிடித்துக் கொண்டு, அக்கா மீது ஒரு சொட்டு மழைநீர்கூட விழாதவாறு மிகவும் அக்கறையுடன் அவனைக் காப்பாற்றி அழைத்துச் செல்கிறான் அந்தச் சிறுவன்.

அதுமட்டுமன்றி, வழியில் அவர்களை நோக்கி வந்த நாயைக் கண்டு அக்கா பயந்துவிடக்கூடாது என்பதற்காக, தனக்குத்தானே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அந்த நாயை விரட்டியடிக்கும் அவனது வீரம் கலந்த பாசம் பார்ப்போர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

வயது சிறியதாக இருந்தாலும், தன் அக்காவைப் பாதுகாக்க வேண்டும் என்ற அவனது அந்தப் பொறுப்புணர்வு உணர்ச்சிப்பூர்வமானதாக அமைந்துள்ளது. ரக்ஷா பந்தன் கொண்டாட்டங்களின் பின்னணியில் வெளியான இந்த வீடியோ, வெறும் சடங்குகளைத் தாண்டி உடன்பிறந்தவர்களின் உண்மையான அன்பே ஆகச்சிறந்த பாதுகாப்பு என்பதை மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்தியுள்ளது.

மேலும் “இவன்தான் உண்மையான தம்பி, ரக்ஷா பந்தனின் நிஜமான நாயகன்” என்று இணையவாசிகள் பலரும் நெகிழ்ச்சியுடன் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இக்காலத்துச் சிறுவர்களிடம் மறைந்து வரும் பாசப் பிணைப்பிற்கு மத்தியில், இந்த பிஞ்சு தம்பியின் பாதுகாப்பு உணர்வும் பாசமும் நெஞ்சை நெகிழ வைக்கும் ஒரு உன்னதமான நிகழ்வாக மாறியுள்ளது.

“>