தமிழ் தேசிய சிந்தனையோடு நான் தொடர்ந்து பயணிக்கத் தேர்ந்தெடுத்த ஒரே இயக்கம் அதிமுகர்தான். எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர் அவர்களின் லட்சியமும், மண்ணின் மைந்தரான ‘பச்சைத் தமிழர்’ எடப்பாடியார் அவர்களின் உழைப்புமே என்னை இந்தக் கட்சிக்கு ஈர்த்த முக்கியக் காரணமாகும். என் பள்ளிப் பருவத்திலிருந்தே அரசியல் ஆர்வம் எனக்கு இருந்தபோதிலும், 2009-க்குப் பிறகு நாம் தமிழர் கட்சியை ஆரம்பித்து ஈழத் தமிழர்கள் மற்றும் தமிழின நலனுக்காக குடும்பம், தொழில் அனைத்தையும் மறந்து ஊர் ஊராகச் சுழன்று வேலை செய்தேன். குறுகிய காலத்திலேயே எனது கார்கள் லட்சக்கணக்கில் ஓடிய அளவுக்குக் கட்சிக்காக உழைத்த அந்த நாłகள் எனது வாழ்வின் முக்கியமான திருப்பங்களாகும்.
ஆனால், அன்று நான் யாரைச் சுமந்துகொண்டு சுற்றினேன் என்பதை இப்போது நினைத்தால் சிரிப்புதான் வருகிறது; அதைப் பற்றிப் பேசுவதும் இப்போது தேவையற்றது. காலத்தின் மாற்றத்தால் உண்மையான தமிழர்களை ஆள வைக்கவும், தமிழ்நாட்டைக் காக்கவும் வேண்டும் என்ற முடிவுக்கு வந்து, அண்மையில் மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்களை நேரில் சந்தித்துப் பேசினேன். அப்போது அவரிடம், “என்னைப் போன்ற லட்சக்கணக்கான தொண்டர்கள் அதிமுகவில் இணையக் காத்திருக்கிறோம்; நீங்கள் தமிழ்நாட்டிற்கு எவ்வளவோ சாதனைகளைச் செய்திருக்கிறீர்கள், ஆனால் அதை மக்கள் மத்தியில் குறைவாகப் பேசியிருக்கிறீர்கள்” என்று வெளிப்படையாகக் கூறினார்.
அவரையோ பேசிக் காட்டுவதை விடச் செயலில் மட்டுமே அனைத்தையும் சாதித்துக் காட்டும் ஒரு இயற்கை குணம் படைத்தவராக நான் புரிந்து கொண்டேன். தமிழர்களுக்கான உண்மையான அரசியலைச் செயலில் காட்ட அவர் நினைப்பதை எங்களது சந்திப்பில் தெளிவாக உணர்ந்துகொண்டேன்.
தமிழ் தேசிய சிந்தனையோடு பயணித்த இனி பயணிக்க நான் தேர்ந்தெடுத்த கட்சி அதிமுக.காரணம் எட்டாவது வள்ளல் எம்ஜியார் மற்றும் பச்சை தமிழர் எடப்பாடியார்.
நேரடியாக அரசியல் அனுபவம் என்பது எனது 9-ம் வகுப்பிலேயே தொடங்கி விடுகிறது.
அப்போதே தமிழ் தமிழர் என்று திமுகவிற்கு செம்பு தூக்கிக்கொண்டு… https://t.co/xG26dQZMhR pic.twitter.com/SBmb7hgcFj— director esakki (@director_esakki) August 28, 2026
“>
எம்.ஜி.ஆர் என்ற மாமனிதர் உருவாக்கிய இந்தக் கட்சியில் இருந்து கொண்டு, எடப்பாடியார் செய்த சாதனைகளை இனி உலகெங்கும் உரக்கச் சொல்வேன் என்று கூறி அதிமுகவில் என்னை இணைத்துக் கொண்டேன். என்னை அன்போடு அரவணைத்து, பல நல்விஷயங்களைக் குறுகிய நேரத்தில் என்னுடன் பகிர்ந்துகொண்ட பச்சைத் தமிழர் எடப்பாடியார் அவர்களுக்கு எனது கோடான கோடி நன்றிகள்.
