நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கும் பணிகள் குறித்து விவாதிக்க, தமிழக அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் குழுவினர் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஐ.ஏ.எஸ் அவர்களை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜமோகன், வினோத், தங்கம் தென்னரசு மற்றும் தில்லி சிறப்புப் பிரதிநிதி வெங்கட்நாராயணன், தலைமை வதிவிட ஆணையர் ஜெயா ஐ.ஏ.எஸ், என்.ஆர்.டி ஆணையர் சதீஷ் ஐ.ஏ.எஸ் உள்ளிட்டோர் இந்த உயர் மட்டக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
சுற்றுலா மற்றும் ஆன்மிகப் பயணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக நேபாளத்திற்குச் சென்று அங்கு தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தற்போதைய நலன் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அவர்களைப் பாதுகாப்பாக மீட்டு தமிழகத்திற்கு அழைத்து வருவது தொடர்பாகவும், மத்திய அரசுடன் இணைந்து மேற்கொள்ளப்பட வேண்டிய மீட்புப் பணிகள் குறித்தும் ஆழமாக விவாதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட தமிழர்களை விரைவாகவும் பத்திரமாகவும் மீட்கத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து உடனடியாக வழங்குமாறு வெளியுறவுத்துறை அதிகாரிகளிடம் தமிழகக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Ministers Aadhav Arjuna, Rajmohan, Vinoth and Thennarasu, along with Tamil Nadu Government’s Delhi Special Representative Venkatnarayana, Chief Resident Commissioner Jaya IAS and NRT Commissioner Sathish IAS, met Foreign Secretary Vikram Misri IAS and held discussions on the… pic.twitter.com/Od1mcRyHPO
— Vignesh Theni (@Vignesh_twitz) August 28, 2026
“>
மத்திய அரசு இந்த விவகாரத்தில் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதியளித்துள்ளதால், நேபாளத்தில் உள்ள தமிழர்களை மீட்கும் பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
