வெளிநாட்டில் குடியேறினால் சிறந்த மருத்துவ வசதிகள் கிடைக்கும் என்ற எண்ணத்தை மாற்றும் வகையில், நியூசிலாந்தில் வசிக்கும் இந்தியப் பெண்ணான அக்ரிதி ஜெயஸ்வால் ஸ்ரீவஸ்தவாவின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. நோய்வாய்ப்பட்ட தனது மகனுக்குச் சிகிச்சை அளிக்க முடியாமல் அவர் சந்தித்த துயரமான அனுபவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அக்ரிதியின் மகன் கெவின், 10 நாட்களாகத் தொடர்ந்து கடுமையான இருமலால அவதிப்பட்டு வந்துள்ளான். மகனின் உடல்நிலை மோசமடைந்ததால், அவர் அங்குள்ள உள்ளூர் மருத்துவ மையத்தைத் தொடர்புகொண்டு மருத்துவரைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளார். ஆனால், அவருக்கு ஒரு வாரம் கழித்தே நேரம் ஒதுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கடும் வேதனையடைந்த அக்ரிதி, முன்பதிவு செய்யத் தேவையில்லாத இரவு நேர அவசர மருத்துவமனைக்குத் தனது மகனை அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அங்கு மருத்துவமனை நோயாளிகளால் நிரம்பிவிட்டதாகவும், புதிய நோயாளிகளைச் சேர்க்க முடியாது என்றும் வாசலிலேயே அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருந்தது.

அந்த அறிவிப்புப் பலகையை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்த அக்ரிதி, நியூசிலாந்து போன்ற ஒரு வளர்ந்த நாட்டில் மருத்துவரைச் சந்திப்பதே பெரிய போராட்டமாக இருக்கிறது என்று ஆதங்கப்பட்டுள்ளார். அதேவேளையில், இந்தியாவில் உடனடியாக அதே நாளில் மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெற முடியும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Akriti Jaiswal Srivastava (@navkriti_nz)

“>

இந்த வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இதைப் பார்த்த பல வெளிநாடு வாழ் இந்தியர்கள், லண்டன் உள்ளிட்ட பிற மேலை நாடுகளிலும் இதேபோலச் சுகாதாரத் துறையில் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய மோசமான சூழ்நிலையே நிலவுவதாகத் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.