தினமும் மவுத்வாஷ் பயன்படுத்தும் பழக்கம் பலரிடம் உள்ளது. ஆனால், கடைகளில் விற்கப்படும் மவுத்வாஷை வாங்குவதற்கு முன்பாக அதில் ஆல்கஹால் இருக்கிறதா என்பதைப் பார்த்து வாங்குவது வாய் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமாகும்.

ஆல்கஹால் கலந்த மவுத்வாஷ்களைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது, அது வாயின் மென்மையான திசுக்களைச் சேதப்படுத்தி கடுமையான எரிச்சல், வலி மற்றும் வாய்ப்புண்களை ஏற்படுத்தக்கூடும். மேலும், இது வாய் வறட்சியை உண்டாக்கிப் பல அசௌகரியங்களுக்கு வழிவகுக்கிறது.

நமது வாயில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களைப் போலவே ந நன்மை செய்யும் நல்ல பாக்டீரியாக்களும் உள்ளன. ஆல்கஹால் கொண்ட மவுத்வாஷை அதிகமாகப் பயன்படுத்தும்போது, இந்த நல்ல பாக்டீரியாக்களும் அழிந்து, தீமை செய்யும் கிருமிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

வாய் எப்போதும் வறட்சியாக இருக்கும்போது ஈறுகளில் வீக்கம் மற்றும் ரத்தக்கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இது நாளடைவில் கடுமையான ஈறு நோய்களுக்கு வழிவகுப்பதுடன், பேசுவதிலும் உணவை மென்று விழுங்குவதிலும் பெரிய சிரமத்தை உண்டாக்கும்.

எனவே, வாய் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் வறட்சியைக் குறைக்கவும் ஆல்கஹால் இல்லாத மவுத்வாஷ்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவதே பாதுகாப்பான மற்றும் சிறந்த வழிமுறையாகும்.