நடிகர் தனுஷ் அரசியலில் களமிறங்கத் திட்டமிட்டுள்ளதாகவும், வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளைக் களமிறக்கத் தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக தலைவர் விஜய் அரசியலில் நுழைந்து வெற்றி கண்டதைத் தொடர்ந்து, தற்போது நடிகர் தனுஷின் ரசிகர்களும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் தீவிர மக்கள் சந்திப்புகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை படப்பிடிப்பு தளத்தில் தனுஷ் தனது ரசிகர்களைச் தொடர்ந்து சந்தித்து வந்ததுடன், கல்வி உதவிகளை வழங்குவது போன்ற முன்னெடுப்புகளிலும் ஈடுபட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, சட்டமன்றத் தொகுதிகளுக்கு வார்டு வாரியாக ரசிகர் மன்ற உறுப்பினர்களைச் சேர்க்கும் பணிகளைத் தீவிரப்படுத்த அவர் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தனுஷின் ரசிகர் மன்ற நிர்வாகிகளைத் தனித்துப் போட்டியிடச் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள் தாமாக முன்வந்து களமிறங்கலாம் என்றும், பிரச்சாரத்தின் போது தனுஷின் புகைப்படம் மற்றும் கொடியைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

“>

 

மேலும், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் ரசிகர் மன்ற பிரதிநிதிகளுக்குத் தனுஷ் தரப்பிலிருந்து தேவையான நிதி உதவிகளும் வழங்கப்படும் என்று கூறப்படுவதால், அரசியல் வட்டாரத்தில் இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.