மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ஒரே பெண்ணைக் காதலித்த விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில், கௌரவ் பங்கஜ் என்ற பிரபல ரவுடி, சக ரவுடியான கௌரவ் ரம்பாவ் மற்றும் அவரது கூட்டாளிகளால் நடுரோட்டில் வைத்துக் கொடூரமாகக் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

​கொல்லப்பட்ட கௌரவ் பங்கஜ் மற்றும் கௌரவ் ரம்பாவ் ஆகிய இருவருக்கும் இடையே ஒரே பெண்ணைக் காதலித்து வந்ததில் ஏற்கனவே கடுமையான முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், வழக்கு ஒன்றில் சிறையிலிருந்த கௌரவ் பங்கஜ் அண்மையில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். சிறையிலிருந்து வந்த பிறகும் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

​இந்தத் தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த கௌரவ் ரம்பாவ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, நடுரோட்டில் வைத்து கௌரவ் பங்கஜை கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த பங்கஜ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

​மக்கள் நடமாட்டம் மிகுந்த நடுரோட்டில் அரங்கேறிய இந்த கொடூரக் கொலை சம்பவம் நாக்பூர் பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான கௌரவ் ரம்பாவை உடனடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.