சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களாகவே ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்றும் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 1,19,600 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14950 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிரடியாக உயர்ந்து ஒரு கிராம் 16,309 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,30,472 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 270 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,70,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.