சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தரவுகளுடன் கூடிய விவாதங்களை முன்வைத்து கவனம் ஈர்த்து வரும் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி, விவசாயிகளின் வாழ்வாதாரப் பாதுகாப்பு குறித்துக் கவலை தெரிவித்து வலுவான கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் பேசிய அவர், சாதாரணப் பொருளான சமோசா விற்கும் வியாபாரி கூட தான் தயாரிக்கும் பொருளுக்கான விலையைத் தாமே நிர்ணயிக்கும் உரிமை பெற்றுள்ளார் என்று சுட்டிக்காட்டினார். ஆனால், அரிதுயிர்ப் பாடுபட்டு உணவுப் பொருட்களை விளைவிக்கும் உழவர்களால் தங்களது சொந்த விளைபொருட்களுக்கு விலையைத் தாங்களே நிர்ணயிக்க முடியாத அவல நிலை நீடிப்பதாக அவர் வேதனை தெரிவித்தார்.
விவசாயிகளின் இந்த நிலையை மாற்றும் வகையில், அண்டை மாநிலமான கேரளாவில் நடைமுறையில் இருப்பதைப் போல தமிழகத்திலும் விவசாயப் பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்யத் தனியாக ஒரு ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
data மற்றும் digital content ஆக பேசும் சௌமியா அன்புமணி
சட்டப்பேரவையில் பேசக்கூடிய எம்.எல்.ஏ.க்களில் தரவுகள் மற்றும் சொல்ல வந்த விஷயத்தை நேர்த்தியாகவும் digital content ஆகவும் பேசக்கூடிய நபராக உள்ளார் சௌமியா அன்புமணி
இன்றைய விவாதத்தில் பேசிய அவர்
“சமோசா விற்கக்கூடிய நபர்கள்… pic.twitter.com/mMwTwDLwUm
— Manikandan Sankar (@reportermani) August 20, 2026
“>
மேலும், அந்த ஆணையத்தில் இடம்பெறும் உழவர்களே, அப்போதைய காலநிலைக்கு ஏற்ப மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தங்களது விளைபொருட்களுக்கான விலையைத் தாங்களே நேரடியாக நிர்ணயம் செய்ய வழிவகை செய்ய வேண்டும் என்றும் அவர் சட்டமன்றத்தில் வலியுறுத்தினார்.
