சட்டமன்றத்தில் விசிக எம்.எல்.ஏ ஜோதிமணி தெரிவித்த கருத்துகள் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. அவர் தேர்தலின்போது தாக்கல் செய்த சொத்து விவரங்களும், தற்போது அவர் சபையில் கூறிய தகவல்களும் முரண்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
கடந்த 12-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் பேசிய உறுப்பினர் ஜோதிமணி, தமக்குச் சொந்தமாக வாகனம் எதுவும் கிடையாது என்றும், வாடகை காரில்தான் பயணிக்கிறேன் என்றும் குறிப்பிட்டார். மேலும், தம்மால் சொந்தமாக ஒரு உதவியாளரை வைத்துக்கொள்ளக் பொருளாதார வசதி இல்லை என்றும் அவர் தெரிவித்தார். அவர் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த அதிகாரப்பூர்வ பிரமாணப் பத்திரத்தின்படி, அவரிடம் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான டொயோட்டா எட்டியோஸ் கார் உள்ளதாகவும், 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 200 கிராம் தங்கம் மற்றும் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் லட்சக்கணக்கில் சொத்துகளும் வாகனமும் இருப்பதாகத் தெரிவித்துவிட்டு, தற்போது சபையில் தன்னிடம் சொந்த வடியும் உதவியாளரும் இல்லை என்று அவர் கூறியிருப்பது முரண்பாடாக உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
முதலமைச்சரை ஏமாற்றினாரா ஜோதிமணி
சட்டமன்றத்தில் பேசிய வி.சி.க. சட்டமன்ற உறுப்பினர் ஜோதிமணி கடந்த 12ம் தேதி பேசும் போது சொந்த வண்டி கிடையாது வாடகை வண்டியில் தான் வருகிறேன். உதவியாளர் வைத்து கொள்ள வசதி இல்லை என்றார்.
ஆனால் அவர் தேர்தலின் போது தாக்கல் செய்த பிரமான பத்திரத்தில்
10… pic.twitter.com/skHdMgp9ad— Manikandan Sankar (@reportermani) August 19, 2026
“>
மக்கள் பிரதிநிதிகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் அவர்கள் சபையில் வைக்கும் கோரிக்கைகள் குறித்து சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
