தென்னிந்தியர்களின் விருப்பமான உணவான தோசையை, கைகளால் சாப்பிடாமல் கரண்டி மற்றும் முள்கரண்டி கொண்டு நாக்பூரைச் சேர்ந்த நன்னடத்தைப் பயிற்சியாளர் ஒருவர் சாப்பிடும் வீடியோ தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கைகளால் சாப்பிடுவதுதான் தோசையின் உண்மையான ருசியைத் தரும் என்று பெரும்பான்மையான மக்கள் வாதிடும் நிலையில், கட்லரியைப் பயன்படுத்துவதுதான் நாகரிகமானது மற்றும் சுகாதாரமானது என்று அவர் வாதிட்டுள்ளார். இந்த வீடியோ வெளியானதிலிருந்து சமூக வலைதளங்களில் இதுகுறித்த விவாதம் தீவிரம் அடைந்துள்ளது.

அந்த வைரல் வீடியோவில், அந்தப் பயிற்சியாளர் தனது தட்டத்திலிருக்கும் தோசையை முள்கரண்டி மற்றும் ஸ்பூனைப் பயன்படுத்தி மிக கவனமாகச் சிறிய துண்டுகளாக வெட்டி சாப்பிடுவதைக் காண முடிகிறது. உணவகங்களில் கைகளால் சாப்பிடுவதை விட, இதுபோன்று கரண்டி முள்கரண்டியைப் பயன்படுத்துவதே அதிக சுகாதாரம் என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். தோசையை கைகளால் உடைத்து சட்னி, சாம்பாரில் தொட்டுச் சாப்பிடும் பாரம்பரிய முறையை விரும்புவோருக்கு இது கடும் அதிர்ச்சியை அளித்துள்ளதுடன், நெட்டிசன்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளது.

நமது பாரம்பரிய உணவு முறைகளைக் கைவிட்டுவிட்டு மேற்கத்திய முறைகளைப் பின்பற்றுவது அவசியமா என்ற கேள்தியை இந்தச் சம்பவம் எழுப்பியுள்ளது. உணவு சாப்பிடும் விதம் அவரவர் விருப்பம் என்றாலும், கைவிட்டுவிட்டு கரண்டியைப் பயன்படுத்துவது உணவுடன் உள்ள உணர்வுபூர்வமான தொடர்பைக் குறைப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Western Wings Spoken English (@westernwingsspokenenglish)

“>
எளிய முறையில் உண்ணப்படும் தோசை போன்ற உணவுகளைக் கூட கரண்டி கொண்டு சாப்பிடுவது நாகரிகமா அல்லது அவசியமற்ற ஆடம்பரமா என்ற விவாதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.