“நாங்கதான் வீடு கட்டிக்கொடுத்தோம்னு பெருமையா சொன்னீங்களே… நீங்க கட்டிக்கொடுத்த வீட்டை கொஞ்சம் நேர்ல போய்ப் பாருங்க!” – தமிழ்நாடு சட்டப்பேரவையில் வீடு கட்டும் திட்டம் குறித்த விவாதத்தின் போது, திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவை நோக்கி அமைச்சர் வினோத் இப்படி ஒரு நேரடி சவாலை விடுத்து அவையைக் சூடேற்றினார்.

​அமைச்சரின் இந்தச் சீண்டலுக்குத் தன் பாணியில் உடனடியாக பதிலடி கொடுத்த கே.என்.நேரு, “நாங்கள் குறை சொல்லாத அளவுக்கு நீங்க புதிய வீடுகளைச் சரியா கட்டுங்க!” என சாதுரியமாகக் கூறி ரிட்டர்ன் ‘பஞ்ச்’ வைத்தார்.

​வீடு கட்டிக் கொடுத்த விவகாரத்தில் அமைச்சர் வினோத்தும் திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவும் பேரவையில் மாற்றி மாற்றிப் பேசித் தாக்கிப் பேசிய இந்தச் சம்பவம், சட்டமன்றத்தில் பெரும் பரபரப்பையும் சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.