“நம்முடைய முதலமைச்சருக்கு பொதுவாக புகழ்ச்சி பிடிக்காது; அவர் மற்ற முதலமைச்சர்களைப் போல் இல்லை. அதனால் அனைவரும் துறை ரீதியான கருத்துகளை மட்டுமே பேசுங்கள்,” என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் பேசினார்.

​அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு உடனே பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, “முதலமைச்சருக்கு புகழ்ச்சி பிடிக்காது என்று சொன்னால் பரவாயில்லை; ஆனால் மற்ற முதலமைச்சர்களைப் போல் இல்லை என்றெல்லாம் ஒப்பிட்டுப் பேச வேண்டிய அவசியமில்லை. எங்களுடைய முதலமைச்சரும் இதுபோல யாராவது புகழ்ந்து பேசினால், உடனே ‘அப்படி பேசக்கூடாது’ என்று சபையிலேயே தடுத்து நிறுத்தியிருக்கிறார்,” எனக் காரசாரமாகத் தெரிவித்தார்.

​முதலமைச்சர்களின் புகழ்ச்சி மற்றும் ஒப்பீடு குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும், திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவும் மாற்றி மாற்றிப் பேசிய இந்தச் சம்பவம் சட்டப்பேரவையில் பெரும் பரபரப்பையும் சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.