“நாங்கள் ஆளுங்கட்சியாக இருந்தாலும், எங்கள் பேரவைத் தலைவர் உங்களுக்குத் தேனைத் தருகிறார்; எங்களுக்குப் பாலைத் தருகிறார்!” – தமிழ்நாடு சட்டப்பேரவையில் தவெக எம்.எல்.ஏ ரெட்டியார்பட்டி நாராயணன் பேசிய இந்தப் பேச்சு அவையில் பெரும் சிரிப்பலையையும் சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது பேசிய அவர், பேரவைத் தலைவரின் நடுநிலைமையையும் கனிவான அணுகுமுறையையும் பாராட்டும் வகையில், “பேரவைத் தலைவர் அனைவரையும் சமமாக நடத்தி, இனிப்பான அனுபவத்தைத் தருகிறார்” என்பதைத் ‘தேனும் பாலும்’ என உவமையாகக் குறிப்பிட்டுப் பேசினார்.
காரசாரமான அரசியல் விவாதங்களுக்கு இடையே, தவெக எம்.எல்.ஏ ரெட்டியார்பட்டி நாராயணனின் இந்தச் சுவாரஸ்யமான பேச்சு, சட்டமன்றத்தில் இருந்த அனைத்து உறுப்பினர்களையும் புன்னகைக்க வைத்துள்ளது.
