சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படும் நிலையில் கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை அதிகரித்து வந்தது. இந்த நிலையில் இன்று விலை அதிரடியாக குறைந்துள்ளது நகை பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 680 வரையில் குறைந்து ஒரு சவரன் 1,13,640 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,205 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 15496 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,23,968 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு 5 ரூபாய் வரையில் குறைந்து ஒரு கிராம் 250 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,50,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.