தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ராணிப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தாஹீரா ஆற்றிய கன்னிப்பேச்சு அவையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன், சமூக வலைதளங்களிலும் பெரும் வைரலாகி வருகிறது. சாதாரண மற்றும் எளிய குடும்பப் பின்னணியில் இருந்து தன்னை அடையாளம் கண்டு, சட்டமன்றத்தில் குரல் எழுப்பப் பெரியதொரு வாய்ப்பினை வழங்கிய கட்சித் தலைமைக்கு அவர் தனது நெகிழ்ச்சியான நன்றியைத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டைத் தாண்டி இந்தியாவே இன்றைய முதலமைச்சரின் ஆளுமையைக் கொண்டாடி வருவதாகக் குறிப்பிட்ட அவர், தன் போன்ற சாதாரண நபர்களுக்கு ஒரு முகவரியைப் பெற்றுத் தந்த அஞ்சல் நிலையம் போன்றது கட்சித் தலைமை எனப் புகழாரம் சூட்டினார். “எளிய மக்களின் நலன்களை நினைத்துப் பணியாற்றும் நாளை நீங்களும் முதலமைச்சர்தான்” என்று அவர் குறிப்பிட்ட சொற்கள் அவையில் கலகலப்பான சூழலை ஏற்படுத்தியது. “வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்” என்ற அவரது வார்த்தைகள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளன.
“அதே டெய்லர் அதே வாடகை”
சில ஆண்டுகளுக்கு முன் சட்டமன்றத்தை பார்த்து போல் உள்ளது தாஹீரா பேச்சு
சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் ராணிப்பேட்டை எம்.எல்.ஏ. தாஹீரா அவர்களின் உரை
“சாதாரண எளிய குடும்பத்தில் பிறந்த என்னை”
“போட்டியிட வாய்ப்பு அளித்து தற்போது இந்த… pic.twitter.com/6UbZO3r5Nz
— Manikandan Sankar (@reportermani) August 18, 2026
“>
சட்டமன்றத்தின் தற்போதைய நிகழ்வுகளைப் பார்க்கும்போது, கடந்த காலப் புகழ்ச்சி உரைகளின் தொடர்ச்சியாகவே இது பார்க்கப்படுகிறது என்றாலும், எளிய பின்னணியிலிருந்து சட்டமன்றத்திற்கு வந்துள்ள ஒரு பெண் எம்.எல்.ஏ-வின் உணர்ச்சிபூர்வமான உரை அரசியல் அரங்கில் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
