மகாராஷ்டிர மாநிலம் புனே மாநகரில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், பொது அமைதியை பேணவும் அம்மாநில காவல்துறை ஒரு முக்கியமான அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி, புனே நகரம் முழுவதும் நள்ளிரவு 12 மணி முதல் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் 14 நாட்களுக்குக் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் காவல்துறையின் இந்த திடீர் மற்றும் அதிரடி அறிவிப்பு நகரின் பொதுமக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய உத்தரவின்படி, புனே நகரின் எந்தவொரு பொது இடத்திலும் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் சட்டவிரோதமாக ஒன்று கூடுவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் முன்னெச்சரிக்கையாக தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விதியை மீறி நான்கு பேருக்கு மேல் ஒன்று கூடினால், அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு வாரங்களுக்கு இந்த உத்தரவு நடைமுறையில் இருக்கும் என்பதால், பொதுமக்கள் அனைவரும் காவல்துறையின் இந்தக் கட்டுப்பாடுகளுக்குக் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அவசியமற்ற கூடுகைகளைத் தவிர்க்குமாறும், சட்டம் ஒழுங்கு பராமரிப்பிற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட வேண்டாம் என்றும் புனே மாநகரக் காவல்துறை மக்களை அறிவுறுத்தியுள்ளது.
