உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியில் பாம்புக் கடிக்கு உள்ளான தனது தம்பியை, மருத்துவர்களின் எச்சரிக்கையை ஏற்று கண்விழித்திருக்கச் செய்ய அண்ணன் ஒருவர் மேற்கொண்ட போராட்டம் தற்போது இணையத்தில் வைரலாகி பலரது நெகிழ்ச்சியைப் பெற்று வருகிறது.

ஹர்தோய் பகுதியில் உள்ள இளைஞர் ஒருவரை நச்சுப் பாம்பு கடித்துள்ளது. விஷம் உடலின் உச்சிக்கு ஏறியதால், அந்த இளைஞருக்குக் கடுமையான மயக்கமும் தூக்கமும் வரத் தொடங்கியுள்ளது. உடனடியாக அவரது சகோதரர் அவரைத் தூக்கிக் கொண்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த இளைஞரைப் பரிசோதித்த மருத்துவர்கள், விஷத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அவரை ஒருபோதும் தூங்க அனுமதிக்கக் கூடாது என்றும், அவ்வாறு தூங்கினால் உயிர் பிழைப்பது கடினம் என்றும் எச்சரித்துள்ளனர்.

தம்பியைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் இருந்த அவரது சகோதரர், தம்பி தூங்கிவிடக் கூடாது என்பதற்காகத் தொடர்ந்து அவனது முகத்தில் மென்மையாகத் தட்டியும், கன்னத்தில் அறைந்தும் விழிப்புடனேயே வைத்திருக்க முயன்றுள்ளார். மருத்துவர்கள் உடனடியாகத் தகுந்த சிகிச்சையளித்து, அந்த இளைஞருக்கு 15 வித்துமுறிவு எதிர் நச்சு ஊசிகளை செலுத்தியுள்ளனர்.

— Amit sehra (@darsan44562) August 17, 2026

“>

 

தீவிர சிகிச்சைக்குப் பின் விஷம் முறியடிக்கப்பட்டு இளைஞரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான நெகிழ்ச்சியான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.