ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா பகுதியில் உள்ள தொழிலகப் பேட்டையில், மேல் தளத்திற்கு ஜெனரேட்டரைத் தூக்கிச் செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இரண்டு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்ச்குலா தொழிற் பூங்கா வளாகத்தில் உள்ள கட்டிடம் ஒன்றின் மேல் தளத்திற்குப் பெரிய ஜெனரேட்டர் ஒன்றை ஏற்றுவதற்காக கிரேன் பயன்படுத்தப்பட்டது. அப்போது திடீரென கிரேனின் சமநிலை குலைந்து அது நிலைதடுமாறி கவிழ்ந்தது. ஜெனரேட்டருடன் இணைந்தவாறு மேல் தளத்தில் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தொழிலாளர்கள், கிரேன் கவிழ்ந்த வேகத்தில் நான்காவது மாடியில் இருந்து கீழே விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
கட்டுப்பாட்டை இழந்த கிரேன் அருகில் இருந்த மின் கம்பத்தின் மீதும் மோதியது. இதனால் மின்கம்பம் முறிந்து விழுந்ததோடு, அப்பகுதியில் பெரும் பீதியும் பரபரப்பும் ஏற்பட்டது. அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் உடனடியாகக் கூடி மீட்புப் பணிகளில் உதவ முயன்றனர்.
Two workers were killed after a crane reportedly lost balance and overturned while lifting a generator to an upper floor in the Industrial Area of Panchkula.
According to preliminary information, the generator was being transported to an elevated level when the crane suddenly… pic.twitter.com/ddTInZtMgQ
— Hate Detector 🔍 (@HateDetectors) August 17, 2026
“>
இந்த விபத்து தொடர்பான அதிர்ச்சியூட்டும் காட்சி அடங்கிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. விபத்திற்கான முழுமையான காரணங்கள் மற்றும் உயிரிழந்த தொழிலாளர்களின் விபரங்கள் குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
