மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பரபரப்பான ரோட்டில், காதல் விவகாரம் காரணமாக ஒரு இளைஞர் கூர்மையான ஆயுதங்கள் மற்றும் குச்சிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட இளைஞர், தனது காதலியைப் பார்த்ததாகச் சந்தேகமடைந்த நபர் ஒருவர், அவரை வழிமறித்துத் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர், தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த இளைஞரைத் துரத்தித் துரத்தித் தாக்கியுள்ளார்.

“என் காதலியை ஏன் பார்க்கிறாய்?” என்று கேட்டுத் தொடங்கிய இந்த வாக்குவாதம், உடனடியாக வன்முறையாக மாறியது. தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் கூர்மையான ஆயுதங்களையும் மரக் குச்சிகளையும் பயன்படுத்தி அந்த இளைஞரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளது.

சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த நேரத்திலேயே இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இளைஞரை ரத்த வெள்ளத்தில் சாய்த்த கும்பல், தாக்குதலுக்குப் பிறகு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் சிலர் சிறுவர்களாக இருக்கலாம் என்று காவல்துறை சந்தேகிக்கிறது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள யெரவாடா காவல்துறையினர், தப்பியோடிய சந்தேக நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.