டெல்லி விமான நிலையத்திற்கு வந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர், அங்குள்ள ஏழைப் பெண்களுக்கு மளிகைப் பொருட்கள் வாங்கித் உதவி செய்தபோது, உள்ளூர் கடைக்காரர் ஒருவரால் ஏமாற்றப்பட்ட சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு டெல்லி விமான நிலையத்திற்கு வருகை தந்த ரஷ்யாவைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர், அங்கு அமர்ந்திருந்த ஏழைப் பெண்கள் சிலர் தலா ஐம்பது ரூபாய் கேட்டவுடன், மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு அருகில் இருந்த மளிகைக் கடையில் சென்று குடிநீர் மற்றும் மளிகைப் பொருட்களை வாங்கித் தந்துள்ளார். அதற்குப் பில் தொகையாக 1,400 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. அந்தப் பொருட்களின் அளவுக்கு அதிகமான விலையைக் கண்டு சந்தேகமடைந்த ப்ளாகர் ஒருவர், உடனடியாக அந்த ரஷ்யப் பெண்ணுடன் சேர்ந்து கடைக்காரரிடம் சென்று தட்டிக்க கேட்டுள்ளார். மறுபடியும் கணக்கிட்டபோது அந்தப் பொருட்களின் உண்மையான மதிப்பு 1,100 ரூபாய்தான் என்பது அம்பலமானது.

“>

 

வெளிநாட்டிலிருந்து வரும் விருந்தினர்களை இப்படி ஏமாற்றுவது குறித்து கடைக்காரரைக் கடுமையாகக் கண்டித்த அந்தப் ப்ளாகர், சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாக்க உதவினார். இதனால் நெகிழ்ந்துபோன ரஷ்யப் பெண், “உங்களைப் போன்றவர்களால்தான் இந்தியா மிகவும் அழகாகத் தெரிகிறது” என்று ஆங்கிலத்தில் கூறி அவருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.