சமூக வலைத்தளங்களில் எப்போதுமே கணவன், மனைவி மற்றும் ‘மூன்றாம் நபர்’ தொடர்பான விவகாரங்கள் காட்டுத்தீ போலப் பரவுவது வழக்கம். அந்த வகையில், மத்தியப்பிரதேச மாநிலம் தலைநகர் போபாலுக்கு நைட்புயூட்டிக்குச் சென்ற கணவன், தனது மனைவியை மற்றொரு இளைஞருடன் மோமோஸ் கடைசியில் கையும் களவுமாகப் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், இணையத்தில் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அதாவது மத்தியப்பிரதேச மாநிலம் போபால் நகரின் ஒரு பகுதியில் உள்ள மோமோஸ் தள்ளுவண்டி கடையில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. வழக்கம்போல இரவுப் பணிக்கு செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் அந்த நபர். ஆனால், அதே நேரத்தில் தனது மனைவியும் தன் காதலன் என்று கூறப்படும் மற்றொரு இளைஞருடன் அதே பகுதியில் உள்ள ஒரு மோமோஸ் கடைக்குச் சென்றுள்ளார். விதி விளையாடியதோ என்னவோ, அதே நேரத்திற்கு அந்தத் கணவனும் தனது நண்பருடன் சேர்ந்து அதே மோமோஸ் கடைக்குச் சாப்பிட வந்துள்ளார்.
View this post on Instagram
தன் மனைவியை மற்றொரு இளைஞருடன் நெருக்கமாகப் பார்த்ததும் உறைந்துபோன கணவனுக்கு ஆத்திரம் தலைக்கு ஏறியது. அடுத்த சில நிமிடங்களில் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்தது. ஆரம்பத்தில் வார்த்தைப் போராகத் தொடங்கிய இந்தச் சண்டை, சிறிது நேரத்திலேயே கைகலப்பாகவும் வெறித்தனமான அடிதடியாகவும் மாறியது.
ரோட்டின் நடுவே கணவன், மனைவி மற்றும் அவருடன் இருந்த இளைஞர் ஒருவரையொருவர் தாக்கிப் போராடும் காட்சிகள் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடையச் செய்தது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக ஓடிவந்து இரு தரப்பினரையும் விலக்கிவிட முயன்றனர். ஆனால், அதற்குள் அங்கிருந்த சிலர் இந்த முழுச் சண்டையையும் தங்கள் செல்போன்களில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விட்டனர். தற்போது இந்த வீடியோ இன்டர்நெட்டில் தீயாய் பரவி வருகிறது.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவலறிந்த கூடுதல் டிசிபி அனில் சர்மா கூறுகையில், “இந்தச் சண்டை தொடர்பான வீடியோ எங்கள் காவல் நிலையத்திற்கு வந்து சேர்ந்துள்ளதுடன், இதுகுறித்து முதற்கட்ட விசாரணையும் நடத்தப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க ஒரு குடும்பத்தின் தனிப்பட்ட தகராறு என்று சிலர் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இதுவரை கணவன்-மனைவி தரப்பிலிருந்தோ அல்லது மற்ற தரப்பிலிருந்தோ எந்தவிதமான அதிகாரப்பூர்வ புகாரும் காவல் நிலையத்தில் அளிக்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.
வைரலாகிய இந்தச் சமூக வலைத்தள வீடியோவின் அடிப்படையில் காவல்துறை தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில், இது வெறும் தற்காலிகக் குடும்பச் சண்டையா அல்லது காவல் நிலையம் வரை செல்லக்கூடிய விவகாரமா என்பது இனிவரும் நாட்களில் தெரியவரும்.
