ஆந்திர மாநிலம் திருப்பதி போலீஸ் பரேட் மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், அம்மாநில தேவாலய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் ஆனம் ராமநாராயண ரெட்டி கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மேடையில் அவர் சுதந்திர தின உரையாற்றிக் கொண்டிருந்தபோது, திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயக்கமடைந்து கீழே சரிந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களும் அதிகாரிகளும் உடனடியாக விரைந்து வந்து அவரைப் பிடித்துக் கொண்டனர்.
மருத்துவர்கள் உடனடியாக அவருக்குப் முதலுதவி சிகிச்சை அளித்தனர். ரத்த அழுத்தம் (BP) திடீரென குறைந்ததே அவர் மயக்கமடைந்தற்குக் காரணம் எனத் தெரியவந்தது. முதலுதவிக்குப் பிறகு அமைச்சரின் உடல்நிலை சீரடைந்தது.
சுதந்திர தின விழாவில் மயக்கமடைந்த ஆந்திர அமைச்சர் ராமநாராயண ரெட்டி #AndhraPradesh | #IndependenceDay | #RamanarayanaReddy | #PuthiyathalaimuraiTV pic.twitter.com/UmPRkgtJE4
— PttvOnlinenews (@PttvNewsX) August 15, 2026
இதனைத் தொடர்ந்து, அமைச்சரின் விடுபட்ட சுதந்திர தின உரையைத் திருப்பதி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஸ்வரலு வாசித்து நிறைவு செய்தார். சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு அமைச்சர் மீண்டும் விழாவில் கலந்துகொண்டார். சுதந்திர தின விழ மேடையில் அமைச்சர் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் அங்கிருந்தவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
