பஞ்சாப் மாநிலம் கபுர்தலா பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஒரு கோயில் வாசலில் நடைபெற்ற ஒரு கொடூரச் சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியையும் பொதுமக்களிடையே கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கோயில் வாயிலில் அமர்ந்திருந்த பெண் பிச்சைக்காரர் ஒருவரை நபர் ஒருவர் கண்மூடித்தனமாகத் தாக்கும் வீடியோ இணையத்தில் தீயாய் பரவியது.
அந்தப் பெண்மணியுடன் இருந்த சிறு குழந்தைகள், கோயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றைத் தொட்டு விளையாடியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த மோட்டார் சைக்கிளின் உரிமையாளர், அந்த ஏழைப் பெண் மீது தனது வெறியைத் தீர்த்துக் கொண்டுள்ளார்.
வைரலாகப் பரவிய அந்த சிசிடிவி காட்சிகளில், அந்த நபர் பெண்ணைத் தள்ளிவிட்டுத் தனது காலில் அணிந்திருந்த செருப்பைக் கழற்றி சரமாரியாக அடிப்பது பதிவாகியுள்ளது. அங்கிருந்த சில பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஓடிவந்து தடுத்துவிட்டுக் காப்பாற்ற முயன்றபோதிலும், அந்த வெறிபிடித்த நபர் மீண்டும் வந்து அந்தப் பெண்ணைக் காலால் உதைத்துள்ளார். இந்தச் செயல் மனிதநேயமற்ற முறையில் இருந்ததால் நெட்டிசன்கள் பலரும் தங்களது கடும் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
मंदिर के बाहर महिला की चप्पलों से बेरहमी से पिटाई
kapurthala से वायरल हो रहा है, जिसमें एक व्यक्ति एक महिला की चप्पलों से बेरहमी से पिटाई करता दिखाई दे रहा है। वीडियो में व्यक्ति महिला के मुंह पर लगातार चप्पलें मारता नजर आ रहा है, जिसे देखकर लोग भी हैरान और शर्मसार हैं। #punjab pic.twitter.com/Uz9Hn3MXNS— media_sunilkumar (@sunilkhimachali) August 13, 2026
சம்பவத்தால் பயந்துபோன அந்தப் பெண் உடனடியாகக் காவல் நிலையம் சென்று புகார் அளிக்கவில்லை. இருப்பினும், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி மகளிர் ஆணையம் மற்றும் மனித உரிமைகள் குழுக்களின் கவனத்திற்குச் சென்றதை அடுத்து, காவல்துறை சுயமாக முன்வந்து இச்சம்பவத்தைக் கையிலெடுத்தது.
துணை காவல் கண்காணிப்பாளர் சீத்தல் சிங் தலைமையில் விசாரணை முடுக்கிவிடப்பட்டது. வீடியோவை ஆய்வு செய்த போலீசார், அந்த நபர் விகாஸ் சர்மா என்பவரைக் கண்டறிந்தனர். இவர் கோயில் எதிரிலேயே ஒரு கடை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. விகாஸ் சர்மா மீது காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள அவரைப் பிடிக்கத் தனிப்படை போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
