கால்பந்து களத்தில் எதிர்பாராமல் நடக்கும் சில சுவாரசியமான சம்பவங்கள் இணையத்தில் உடனடியாகத் தீயாய் பரவுவது வழக்கம். அந்த வகையில், மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் லீட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற நட்புமுறைப் போட்டி ஒன்றில் அரங்கேறிய கலகலப்பான தருணம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
போட்டியின் நடுவே நடந்த பெனால்டி ஷூட் அவுட் சுற்றின்போது, மான்செஸ்டர் யுனைடெட் அணியின் நட்சத்திர வீரர் பிரூனோ பெர்னாண்டஸ் கோலடிக்க முயன்றார். ஆனால், எதிர்பாராதவிதமாக அவர் அடித்த பந்து இலக்கைத் தாண்டி பக்கவாட்டில் வெளியே சென்றது.
ஸ்டாண்டில் இருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டு தன் தந்தையின் கைகளில் இருந்தபடி போட்டியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த 4 வயது சிறுமி ஒருவர், பிரூனோ அடித்த பந்து கோல் வலைக்குள் சென்றதாகத் தவறாக நினைத்துவிட்டார். உடனடியாக மகிழ்ச்சியில் ஆரவாரத்துடன் கைதட்டித் தன் உற்சாகத்தைக் வெளிப்படுத்தத் தொடங்கினார். ஆனால், அடுத்த கணமே பந்து கோலாகவில்லை, பிரூனோ கோலடிக்கத் தவறிவிட்டார் என்ற உண்மை அவருக்குப் புரிந்தது. இதனால் அந்தப் பிஞ்சு குழந்தையின் உற்சாகம் சட்டென மறைந்துபோனது.
Estes adeptos tinham um objetivo: tirar uma foto com o Bruno Fernandes 🇵🇹📸
Objetivo cumprido ✅ pic.twitter.com/eN0Z2KJkRk
— DAZN Portugal (@DAZNPortugal) August 13, 2026
மறுபுறம், பெனால்டியைத் கோட்டைவிட்ட ஏமாற்றத்தில் ஆரம்பத்தில் சற்று கோபத்துடனும் விறைப்பாகவும் நின்றுகொண்டிருந்த பிரூனோ பெர்னாண்டஸ், சக வீரர்களின் கிண்டல்களைப் பார்த்ததும் தனது முகத்தை மாற்றிக் கொண்டார். கடுமையான முகத்துடன் இருக்க வேண்டியவர், லேசான வெட்கப் புன்னகையுடன் தொடங்கி சிரித்த அந்த விஷயம் மைதானத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
இந்தச் சுவாரசியமான போட்டியின் நிர்ணயிக்கப்பட்ட நேர முடிவில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தன. மேலும் பிரூனோ கோலடிக்கத் தவறிய அந்தத் தருணமும், அதைப் பார்த்து ஸ்டாண்டில் அந்தச் சிறுமி வெளிப்படுத்திய க்யூட் ரியாக்ஷனும் தற்போது இணையத்தின் ஹாட் டாப்பிக்காக வலம் வருகிறது
