அரசு நிகழ்வு ஒன்றில் பத்திரிகையாளர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தற்போது விவாதப் பொருளான நிலையில், ஊடகங்களின் தற்போதைய நிலைப்பாடு குறித்துக் கேள்வி எழுப்பி தவெக தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் பதிவாகியுள்ளன.

தேர்தல் காலத்திற்கு முன்பு சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் பெண்கள், குழந்தைகள் மீதான குற்றங்களை விடுத்து, தவெக தலைவர் விஜய் மீது அவதூறுகளைப் பரப்புவதிலும் அவரது தனிப்பட்ட வாழ்க்கையை அரசியலாக்குவதிலுமே சில ஊடகங்கள் குறியாக இருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பணத்திற்காகவும் அரசியல் ஆதரவுக்காகவும் சில கட்சிகளுக்குச் சாதகமாகச் செயல்பட்ட ஊடகங்கள், தற்போது தங்களுக்கு ஒரு பிரச்சினை வந்ததும் “பத்திரிகை சுதந்திரம்” மற்றும் “வெளிப்படைத்தன்மை” பற்றிப் பேசுவது எந்த வகையில் நியாயம் எனத் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

ஊடகங்களின் இதுபோன்ற ஒருபக்க சார்பான நடவடிக்கைகளால் பொதுமக்கள் ஏற்கனவே தங்களது நம்பிக்கையை இழந்துவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது. விமர்சனங்களைப் பற்றிக் கவலைப்படாமல், முதல்வர் விஜய் மக்களின் நலனுக்காகவும் அரசுப் பணிகளைச் செய்வதிலுமே முழு கவனம் செலுத்துவார் என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“>

 

அரசு நிகழ்ச்சிகளில் ஊடகப் பங்கேற்பு மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்த விவாதம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.