உழைத்து பிழைப்பதற்காகத் தினமும் வேலைக்குச் செல்லும் எளிய மனிதர்களின் வாழ்க்கை எந்த அளவுக்கு ஆபத்தானது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சோகமான சான்றாக அமைந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் பீடு மாவட்டத்தில் மின்சாரக் கம்பம் ஒன்றை நடும் பணியில் ஈடுபட்டிருந்த 32 வயது தொழிலாளி ஒருவர், எதிர்பாராத விதமாகக் கண் இமைக்கும் நேரத்திற்குள் மின்சாரம் தாக்கிப் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
வெறும் ஐந்து நொடிகளுக்குள் நிகழ்ந்து முடிந்த இந்த சோகத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பார்ப்போரின் நெஞ்சைப் பதற வைத்து வருகிறது. பீடு மாவட்டத்தில் மின்சாரக் கம்பம் அமைக்கும் பணியில் சில தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, ஒரு கனரகக் கம்பத்தை உயர்த்த முயன்ற போது, எதிர்பாராத விதமாக அருகில் சென்ற உயர் அழுத்த மின்சாரக் கம்பியின் மீது அது உரசியுள்ளது. இதனால் கம்பத்தில் சக்திவாய்ந்த மின்சாரம் பாய்ந்து, அதைத் பிடித்துக்கொண்டிருந்த 32 வயது தொழிலாளியின் உடலை உலுக்கியது. மின்சாரம் தாக்கிய அதிர்ச்சியில், வெறும் ஐந்து வினாடிகளுக்குள் அந்தத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து தனது உயிரை விட்டுள்ளார்.
உடனிருந்த சக தொழிலாளர்கள் அவரை மீட்க முயன்றும், அதற்குள் அந்தப் பரிதாப உயிரிழப்பு நடந்துவிட்டது. வேலையின் போது முறையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் மின்சாரத்தைத் துண்டிக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாததே இந்தத் துயரச் சம்பவத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
உழைத்து வாழ வேண்டிய ஒரு இளம் தொழிலாளியின் வாழ்க்கை இப்படி நொடிப் பொழுதில் பறிபோனது குறித்துப் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், பணிபுரியும் இடங்களில் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
Beed – A 32-year-old worker died after receiving a strong electric shock on the bypass road in Majalgaon city when power suddenly started flowing during the installation of a distribution pole. A CCTV video of the accident has surfaced, showing the shocking sequence in which the… pic.twitter.com/tV4hq2zNfr
— NextMinute News (@nextminutenews7) August 10, 2026
“>
