சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு விசித்திரமான மற்றும் புதுமையான வீடியோக்கள் வெளியாகி மக்களைப் பெரிதும் கவர்ந்து வருகின்றன. குறிப்பாக, ஆன்மீகம் மற்றும் பண்டிகைக் காலங்களில் மக்கள் தங்களது பக்தியை வெளிப்படுத்த மேற்கொள்ளும் சில வித்தியாசமான முயற்சிகள் அனைவரின் கவனத்தையும் உடனடியாக ஈர்த்துவிடுகின்றன.
அந்த வகையில், தற்போது நடைபெற்று வரும் புகழ்பெற்ற கன்வர் யாத்திரையின் போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி, காண்போரை வியப்பிலும் சிரிப்பிலும் ஆழ்த்தி வருகிறது. சிவபெருமானின் வாகனமான ‘நந்தி’ பகவானின் உருவத்தில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிளை பக்தர் ஒருவர் ஓட்டிச் செல்லும் காட்சிதான் தற்போது இணையத்தின் ஹாட் டாபிக்.
பொதுவாகக் கன்வர் யாத்திரையின் போது பக்தர்கள் புனித கங்கை நீரை எடுத்துச் செல்வதற்காகப் பல்வேறு வகையான வாகனங்களைப் பயன்படுத்துவதும், தங்களின் வாகனங்களை அழகாக அலங்கரிப்பதும் வழக்கம். ஆனால், இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள நபர் தனது இருசக்கர வாகனத்தை யாரும் எதிர்பாராத வகையில், அப்படியே ஒரு காளையின் உருவத்திற்கு மாற்றி அமைத்துள்ளார்.
வண்டியின் முன்பகுதி நந்தியின் தலையைப் போலக் கொம்புகளுடன் வடிவமைக்கப்பட்டு, உடற்பகுதி காளையின் வடிவத்தில் கச்சிதமாகப் பொருத்தப்பட்டுள்ளது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அந்த நந்தி வாகனத்தில் அமர்ந்து கொண்டு ஒருவர் மிகச் சாதாரணமாகச் சாலையில் வண்டியை ஓட்டிச் செல்லும் காட்சி, அதைப் பார்க்கும் யாரையும் ஒரு நிமிடம் ஆச்சரியத்தில் உரைய வைக்கிறது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான சில மணி நேரங்களிலேயே பல்லாயிரக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு வைரலாகிவிட்டது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை மிகவும் நகைச்சுவையாகப் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் “பக்தியில் புதிய உச்சம்”, “நந்தியே நேரில் வந்து வண்டி ஓட்டுவது போல இருக்கிறது” என்றும், “இனி ஹெல்மெட் போடத் தேவையில்லை, நந்தி பகவானே காப்பாற்றுவார்” என்றும் நகைச்சுவையான கமெண்டுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
அதோடு மக்களின் படைப்பாற்றலையும், அதே சமயம் அவர்களின் தீவிர பக்தியையும் ஒருங்கே வெளிப்படுத்தும் இந்த நந்தி பைக் வீடியோ, தற்போது இணையவாசிகளின் மனதைக் கவர்ந்து பெருமளவில் பகிரப்பட்டு வருகிறது.
India is not for beginners…!😂😂 pic.twitter.com/2md3MxMhan
— MS….🍁 (@SadhotraMeenu) August 10, 2026
“>
