பிகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டம், நௌதன் பகுதியில் முதியவர் ஒருவரின் இறுதி ஆசை வித்தியாசமான முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவர் இறந்ததைத் தொடர்ந்து, அவரது உடல் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. மேலும், இசை நிகழ்ச்சியுடன் கூடிய நடனமும் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

முதியவரின் இறுதி விருப்பத்தின்படியே இந்த வித்தியாசமான இறுதி ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக இறுதி ஊர்வலங்கள் அமைதியான முறையில் நடைபெறும் நிலையில், இங்கு மேளதாளங்களுடன் ஊர்வலம் நடைபெற்றது. மேலும், இசைக்கேற்ப நடன நிகழ்ச்சியும் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் இந்த இறுதி ஊர்வலம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தந்தையின் இறுதி ஆசையை நிறைவேற்றுவதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக அவரது மகன் தெரிவித்துள்ளார். தந்தையின் விருப்பத்தை மதித்து, அவர் விரும்பியபடியே இறுதி ஊர்வலம் நடைபெற வேண்டும் என்று குடும்பத்தினர் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மேளதாளங்கள் மற்றும் இசை நிகழ்ச்சியுடன் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.

இந்த விடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, பலரும் இந்த வித்தியாசமான இறுதி ஊர்வலம் குறித்து கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மகனின் செயலை பலர் பாராட்டியுள்ளனர். அதே நேரத்தில், இறுதி நிகழ்வை அவருடைய விருப்பத்துக்கு ஏற்ப நடத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.