திருச்சி அருகே உள்ள கல்லாத்துப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வி (50). இவர் தனது சொந்த மகனான வெங்கடேசன் என்பவரால், உடற்பயிற்சிக்குப் பயன்படும் ‘டம்பள்ஸ்’ கம்பியால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

​சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த காவல்துறையினர், உடனே வெங்கடேசனைப் பிடித்துக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் போது, குடும்பத்தில் நீண்டநாட்களாக நிலவி வந்த சொத்து தகராறு காரணமாகவே ஆத்திரமடைந்து, பெற்ற தாயை ஜிம் டம்பள்ஸ் கம்பியால் அடித்துக் கொலை செய்ததாக வெங்கடேசன் காவல்துறையினரிடம் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

​சொத்து தகராறு காரணமாகப் பெற்ற மகனே தாயை உடற்பயிற்சிக் கம்பியால் அடித்துக் கொன்ற இந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் திருச்சி மற்றும் கல்லாத்துப்பட்டி பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.